அக்டோபர் மாதம் தொடங்குவதற்கு இன்றும் சில நாட்களே உள்ள நிலையில், இம்மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தை பொறுத்த வரை ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன. இதனுடன், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கி விடுமுறையும் உள்ளது. இந்த ஏழு நாட்களுடன் சேர்த்து அக்டோபர் மாதத்தில் மொத்தமாக 15 நாட்களுக்கு விடுமுறைளுக்கு டுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடும்.
அதன்படி அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை நாட்கள் குறித்து பார்க்கலாம்..!
*2 அக்டோபர் 2023, திங்கட்கிழமை, மகாத்மா காந்தி ஜெயந்தி
*12 அக்டோபர் 2023, ஞாயிறு- நரக சதுர்தசி (பல மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது)
*14 அக்டோபர் 2023, இரண்டாவது சனிக்கிழமை, மஹாலயா (கர்நாடகா, ஒடிசா, திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தில்)
*15 அக்டோபர் 2023, ஞாயிறு- கதஸ்தாபனா
*15 அக்டோபர் 2023, ஞாயிறு – மகாராஜா அக்ரசென் ஜெயந்தி (பஞ்சாப், *ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான்)
*18 அக்டோபர் 2023, புதன்- கதி பிஹு (அஸ்ஸாம்)
*19 அக்டோபர் 2023, செவ்வாய் – சம்வத்சரி திருவிழா (குஜராத்)
*21 அக்டோபர் 2023, சனிக்கிழமை- துர்கா பூஜை
*22 அக்டோபர் 2023, ஞாயிறு- மகா அஷ்டமி
*23 அக்டோபர் 2023, திங்கட்கிழமை- மகா நவமி / ஆயுத பூஜை
*24 அக்டோபர் 2023, செவ்வாய் – தசரா/ விஜயதசமி/ துர்கா பூஜை
*25 அக்டோபர் 2023, புதன்கிழமை, துர்கா பூஜை
*26 அக்டோபர் 2023, வியாழன், துர்கா பூஜை சேர்க்கை நாள்
*27 அக்டோபர் 2023, வெள்ளிக்கிழமை, துர்கா பூஜை
*28 அக்டோபர் 2023- நான்காவது சனிக்கிழமை, லட்சுமி பூஜை, பர்கத் திவாஸ்
*31 அக்டோபர் 2023, செவ்வாய், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள்
வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்கள் பல வகையான வேலைகளை டிஜிட்டல் முறையில் முடிக்க முடியும்.
UPI, மொபைல் பேங்கிங் அல்லது இன்டர்நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் சேவைகளில் வங்கி விடுமுறைகள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.