ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை ரிசவ் வங்கி முன்கூட்டியே வெளியிட்டுவது வழக்கம். வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறை நாட்களுக்கு ஏற்றவாறு தங்கள் வேலைகளை முடித்து கொண்டு சிரமத்தை தவிர்க்க முன்கூட்டியே வெளிட்டுகிறது.
அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை ரிசவ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளும் சேர்த்து மொத்தமக 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடும்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த நாட்களில் எந்தெந்த மாநிலங்களில் விடுமுறை என்பது குறித்து பார்க்கலாம்.
- ஆகஸ்ட் 8 – செவ்வாய்க்கிழமை அன்று டெண்டாங் லோ ரம் ஃபாத் விழாவை முன்னிட்டு காங்டாக் மண்டலத்தில் உள்ள வங்கிகள் செயல்படாது.
- ஆகஸ்ட் 12 – இரண்டாவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை.
- ஆகஸ்ட் 15 – சுதந்திர தினத்தையொட்டி காங்டாக், கவுகாத்தி, ஆந்திரா, தெலுங்கானா, அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், இம்பால் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட அனைத்து மண்டலங்களிலும் உள்ள வங்கிகள் இயங்காது.
- ஆகஸ்ட் 16- பார்சி புத்தாண்டை முன்னிட்டு பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூர் மண்டலங்களில் உள்ள வங்கிகள் மூடப்படும்.
- ஆகஸ்ட் 18- ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதியை முன்னிட்டு கவுகாத்தி மண்டலத்தில் உள்ள வங்கிகள் மூடப்படும்.
*. ஆகஸ்ட் 26 நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை - ஆகஸ்ட் 28: முதல் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் இயங்காது.
- ஆகஸ்ட் 29: திருவோணத்தையொட்டி, கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஆகஸ்ட் 30: ரக்ஷ பந்தன் பண்டிகையையொட்டி, ஜெய்ப்பூர் மற்றும் சிம்லா மண்டலங்களின் விடுமுறை அளிக்கப்படும்.
- 30 ஆகஸ்ட் 2023 புதன்கிழமை ஜூலன் பூர்ணிமாவை முன்னிட்டு ஒடிசாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
- எனவே வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறை நாட்களுக்கு ஏற்றவாறு தங்கள் வேலைகளை முடித்து கொண்டு சிரமத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீகள்