சனி, ஞாயிறு விடுமுறை உட்பட செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 16 நாட்களுக்கு வங்கிகளுக்கு மொத்தமாக விடுமுறை அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதம் தொடங்குவதற்கு முன்னதாக அந்த மாதத்திற்கான விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே விடுமுறை நாட்களை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் தங்கள் வங்கிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் செப்டம்பர் மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இம்மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன் படி ஞாயிறு மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் உட்பட 16 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தேசிய விடுமுறையை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதேபோல், ஒவ்வொரு ஞாயிறு மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில், நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இவை தவிர, பிராந்திய பண்டிகைகளின்படி, வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
செப்டம்பர் மாத வங்கி விடுமுறை நாட்கள் குறித்து பார்க்கலாம்…
*3 செப்டம்பர் 2023- ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
*6 செப்டம்பர் 2023- ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி காரணமாக புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், பாட்னா ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
*செப்டம்பர் 7, 2023- ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு அகமதாபாத், சண்டிகர், டேராடூன், காங்டாக், தெலுங்கானா, ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
*செப்டம்பர் 9, 2023- இரண்டாவது சனிக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
*செப்டம்பர் 10, 2023- ஞாயிற்றுக்கிழமை காரணமாக, நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
*செப்டம்பர் 17, 2023- ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
*செப்டம்பர் 18, 2023- விநாயக சதுர்த்தி காரணமாக பெங்களூரு, தெலுங்கானாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
*செப்டம்பர் 19, 2023- விநாயக சதுர்த்தி காரணமாக அகமதாபாத், பேலாப்பூர், புவனேஷ்வர், மும்பை, நாக்பூர், பனாஜி ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
*செப்டம்பர் 20, 2023- விநாயக சதுர்த்தி மற்றும் நுவாகை காரணமாக கொச்சி மற்றும் புவனேஸ்வரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
*செப்டம்பர் 22, 2023- ஸ்ரீ நாராயண குரு சமாதி தினத்தை முன்னிட்டு கொச்சி, பனாஜி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
*செப்டம்பர் 23, 2023 – நான்காவது சனிக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
*செப்டம்பர் 24, 2023- ஞாயிற்றுக்கிழமை காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
*செப்டம்பர் 25, 2023- ஸ்ரீமந்த் சங்கர்தேவ் பிறந்தநாளையொட்டி, கவுகாத்தியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
*செப்டம்பர் 27, 2023- மிலாட்-இ-ஷரீப் காரணமாக ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்படும்.
*செப்டம்பர் 28, 2023- ஈத்-இ-மிலாத் காரணமாக அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், சென்னை, டேராடூன், தெலுங்கானா, இம்பால், கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, ராய்ப்பூர், ராஞ்சி ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் .
*செப்டம்பர் 29, 2023- ஈத்-இ-மிலாத்-உன்-நபி காரணமாக காங்டாக், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும் ATM சேவைகள் மற்றும் ஆன்லைன் வங்கி பரிமாற்றங்கள் மேற்கொள்ளலாம்.