புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமனுக்கு 1 கோடி நிதியுதவி வழங்க பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உத்தரவிட்டுள்ளார்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான அன்ஷுமன் கெய்க்வாட் புற்றுநோயால் அவதிபட்டு வருவதாக இந்திய முன்னாள் கிரிக்கெட் கபில் தேவ் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுருந்த செய்தியில் கூறியதாவது :
புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் இந்திய முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாடின் மருத்துவ செலவை பிசிசிஐ ஏற்க வேண்டும் .
அன்ஷுவுடன் சேர்ந்து விளையாடிய காலங்களை நினைவு கூர்ந்து மிகுந்த வலியுடன் இருக்கிறேன். அவரை இந்த நிலையில் பார்க்க முடியவில்லை. பிசிசிஐ அவருக்கு உதவ வேண்டும். இல்லயென்றால் என்னுடைய ஓய்வூதியத் தொகையை வழங்குகிறேன் என கபில் தேவ் தெரிவித்திருந்தார்.
Also Read : என் நண்பர் டிரம்ப் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது – பிரதமர் மோடி..!!
இந்நிலையில் அன்ஷுமன் கெய்க்வாடின் மருத்துவ செலவுக்கு பிசிசிஐ சார்பில் ₹1 கோடி நிதி வழங்க பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உத்தரவிட்டுள்ளார்.
புற்றுநோயால் அவதிப்படும் அன்ஷுமனுக்கு பிசிசிஐ உதவ வேண்டும் என கபில் தேவ் கூறியதைத் தொடர்ந்து பிசிசிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.