பங்களாதேஷ் தொடரை முடித்துவிட்டு இந்திய அணி அடுத்ததாக இலங்கையுடன் t20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஒருநாள் தொடருக்கு ரோஹித் ஷர்மாவும், 20 ஓவர் போட்டிக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரு தொடர்களுக்கும் இரு வேறு அணிகள் தேர்வாகிவுள்ளது. ஒருநாள் அணியில் முன்னணி வீரர்களான ரோஹித், கோலி, ராகுல், ஷமி ஆகியோர் விளையாடவுள்ளனர். ஆனால் தொடக்க வீரர் தவான் இந்த தொடரில் சேர்க்கப்படவில்லை. பங்களாதேஷ் அணியுடனான மோசமான ஆட்டத்தால் அவர் தேர்வாகவில்லை என கூறுகின்றனர். மேலும் கீப்பர் ரிஷப் பண்ட்டும் இந்த போட்டியில் சேர்க்கப்படவில்லை.
20 ஓவர் போட்டிக்கான அணியில், அணியின் மூத்த வீரர்களான ரோஹித், கோலி, ராகுல், ஷமி ஆகியோர் இடம்பெறவில்லை. இந்த நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. நடந்து முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அரை இறுதியில் மோசமாக தோல்வியுற்றது. அதனை தொடர்ந்து அணியில் சில மாற்றங்களை கொண்டு வார வேண்டும் என்று முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து இந்திய அணியின் எதிர் காலத்தை மனதில்கொண்டு இந்த அணி உருவாக்கபட்டத்தாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். ரோஹித் ஷர்மா காயத்திலிருந்து மீண்டு வராத நிலையில், கோலிக்கு சற்று ஓய்வு கொடுக்கபட்டதாக அணி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. சமீப காலமாக ராகுல், பண்ட் மோசமான ஃபார்ம் தொடர்வதால் அவர்கள் தொடரில் இடம் பெறவில்லை.
ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் துணை கேப்டனாக பொருப்பேற்றுள்ளது வருங்கால அணியை கட்டமைப்பதற்கான வேலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளதை இந்த நடவடிக்கை வெளிகாட்டுகிறது.