அரசு பள்ளியில் (government schools) படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி மற்றும் பொருட்கள், வேலைவாய்ப்பில் முன்னுரிமை, மருத்துவம் படிக்க 7.5 சதவீத ஒதுக்கீடு போன்ற சலுகை இருப்பதால் பெற்றோர்கள் அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கிடைக்கும் நன்மைகள்!
1. அரசு மருத்துவ கல்லூரிகளில் ஒதுக்கீடு
2. தொழில்முறை படிப்புகளில் ஒதுக்கீடு
3. உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதந்தோரும் ஊக்கத்தொகை
4. வழக்கமான சலுகைகள்/விலையில்லா பொருட்கள்
5. தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் முன்னுரிமை
அரசு மருத்துவ கல்லூரிகளில் இட ஒதுக்கீடு :
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வு – நீட் – கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து 2020 ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் ஒன்றை இயற்றியது.
அதன்படி, 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிக்கூடங்களில் (government schools) படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ் ஆகிய படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும். தமிழக அரசு பின்பற்றிவரும் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்குள், ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் இது செயல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.
பஞ்சாயத்து பள்ளிகள், ஆரம்ப, நடுநிலை, மேல்நிலை பள்ளிகள், முனிசிபல், மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிக்கூடங்கள் அரசுப் பள்ளிக்கூடங்களாகக் கருதப்படும்.
பின்தங்கியவர்களாக இருந்து, கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழே தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்புவரை படித்தவர்களும் அரசுப் பள்ளியில் படித்தவர்களாகக் கருதப்படுவார்கள்.
இந்த இட ஒதுக்கீடு, அரசு மருத்துவக் கல்லூரிகள் தவிர, சுயநிதிக் கல்லூரிகளில் அரசுப் பிரிவுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் பொருந்தும். இந்த இட ஒதுக்கீடு தவிர, பொதுவான இடங்களுக்கும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் போட்டியிடலாம் என்றும் இந்த சட்டம் தெரிவிக்கிறது.
7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டுனால், 700-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதி:
1. அரசுப்பள்ளி மாணவராக, 6-12 வரை படிப்பு அல்லது RTE முறையில் 8-12 தனியார் பள்ளியில் படிப்பு. (அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு இல்லை)
2. 12ஆம் வகுப்பில் Physics, Chemistry மற்றும் Biology/Botany/Zoology/Biotechnology பாடங்களில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி
3. நீட் தேர்வில் தேர்ச்சி (145-300 மதிப்பெண் எடுத்தால் கூட போதும்)
4. அரசுப்பள்ளியில் படித்தற்கான சான்றிதழுடன், மருத்துவ சேர்க்கை/கலந்தாய்வுக்கு விண்ணப்பம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.