சென்னையில் இன்று அதிகாலையில் தேவை இல்லாத பழசுகளை எரித்து மக்கள் போகி பண்டிகை கொண்டாடிய (bhogi festival) நிலையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வருட வருடம் 4 நாட்கள் சிறப்பாக தரமாக கொண்டாடப்டுடுகிறது .
இந்த பொங்கல் பண்டிகையை சீரும் சிறப்புமாக கொண்டாட மக்கள் அனைவரும் வெளியூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்று வருகின்றனர் .
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டிள்ளது .
இந்நிலையில் இன்று பொங்கல் பண்டிகை போகியுடன் சிறப்பாக தரமாக தொடங்கியுள்ளது . போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
பழையது கழிந்து புதியது பிறகும் என்ற நம்பிக்கையில் மக்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் பழைய பொருட்களை தீயில் எரித்து பொங்கல் பண்டிகையை இனிதே தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் பழைய பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடிய நிலையில், சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் அதிகபட்சமாக மணலியில் காற்று மாசு அளவு 277 ஆக பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பெருங்குடியில் 272 ஆக பதிவாகியுள்ளது.
இதேபோல் எண்ணூரில் 217, அரும்பாக்கத்தில் 200, ராயபுரத்தில் 199, கொடுங்கையூரில் 154, ஆலந்தூரில் 125, வேளச்சேரியில் 100 என்ற அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : https://itamiltv.com/last-2-days-8-lakh-people-go-for-pongal-travel-vaccation/
சென்னை முழுவதும் புகைமூட்டமாக இருந்ததால் சென்னை விமான நிலையத்தின் ஓடுதளம் தெரியாத அளவிற்கு சாலைகளில் புகை மூட்டம் ஏற்பட்டு உள்ளது.
இதன்காரணமாக சிங்கப்பூர், லண்டன் விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி (bhogi festival) போகி பண்டிகையால் ஏற்பட்ட பபுகைமூட்டத்தில் சில விபத்துகளும் நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.