தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவாகி வரும் லியோ படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது .இன்னும் ஓரிரு நாட்களில் விஜயின் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் 1 வாரத்திற்குள் மொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துவிடும் என சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன .
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்தில் தளபதி விஜய்யுடன் சேர்ந்து திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
முழுவீச்சில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் நடைபெற்று வரும் நிலையில் லியோ படத்தில் பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனுராக் காஷ்யப் இதற்கு முன் நயன்தாரா ,விஜய்சேதுபதி , அதர்வா நடிப்பில் தமிழில் வெளியான இமைக்க நொடிகள் படத்தில் மிரள வைக்கும் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பல முன்னணி நட்சத்திரங்கள் ஒன்று கூடியுள்ள லியோ படத்தில் தற்போது அனுராக் காஷ்யப்பும் இணைந்துள்ளது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது .
இத்தனை சிறப்பான நடிகர்,நடிகைகளை வைத்து லோகேஷ் என்னென்ன மாயாஜாலம் காட்டப்போகிறார் என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.