சமூக விரோதிகள் இல்லாத கட்சி எது என்றால் அது பாஜக தான் . பாஜக ஒருமுறை ஆட்சிக்கு (annamalai) வந்துவிட்டால் திராவிட கட்சிகளுக்கு வாய்ப்பிருக்காது என தமிழக பாஜக தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விளாங்குறிச்சி பகுதியில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அண்ணாமலை அங்கு கூடி இருந்த மக்கள் முன் பேசியதாவது :
கோவையில் மத்திய அரசின் போதை தடுப்பு பிரிவு அலுவலகம் நிச்சயம் திறக்கப்படும் அதில் மாற்று கருத்து கிடையாது.
வாக்கு எண்ணிக்கை முடிந்து 100 நாளில், கோவையில் என்.சி.பி அலுவலகம் திறக்கப்படும்
தேர்தலுக்குப்பின் அதிமுக காணாமல் போகும். மக்களவை தேர்தலுக்குப்பின் ஒரு திராவிட கட்சி கரைந்து விடும். பாஜக ஒருமுறை ஆட்சிக்கு வந்துவிட்டால் திராவிட கட்சிகளுக்கு வாய்ப்பிருக்காது. திராவிட கட்சிகளின் தொண்டர்கள் பாஜக பக்கம் வரத்தொடங்கியுள்ளனர்.
Also Read : https://itamiltv.com/amit-shah-is-coming-to-tamil-nadu-for-election-campaign/
சமூக விரோதிகள் இல்லாத கட்சி எது என்றால் அது பாஜக தான் . அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்பதில் நான் மிகவும் தெளிவாக இருந்தேன் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அது எங்களுக்கு தான் பின்னடைவு
வெறும், 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க.,வால், இந்தியாவை அல்ல, தமிழகத்தில் ஒரு (annamalai) முட்டுச்சந்தை கூட காப்பாற்ற முடியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.