விசாரணை என்ற பேரில் தன்னை கைது செய்ய பாஜக திட்டமிடுவதாக (BJP PLAN) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021 நவம்பரில் புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியது.
இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் இதில் ஊழல் நடந்துள்ளதாக துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா குற்றம் சாட்டினார்.
இதை அடுத்து இந்த புதிய கலால் கொள்கை பின்னர் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் முன்னாள் கலால் துறை அமைச்சர் மணீஷ் சிசோடியா, எம்.பி., சஞ்சய் சிங் ஆகியோரை ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கலால் கொள்கையுடன் தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனி உதவியாளரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அதனை பெற்றுக் கொள்ளாமல் அவர் புறக்கணித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்த வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்க : https://itamiltv.com/arvind-kejriwal-likely-to-be-arrest-after-ed-raid-today-claim-aap-ministers/
அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என டெல்லி மாநில மந்திரி ஆதிஷி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதனால், ஆம் ஆத்மி அலுவலகம் முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விசாரணை என்ற சாக்கில் தன்னை கைது செய்ய பாஜக திட்டமிடுவதாக (BJP PLAN) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அமலாக்கத்துறை சம்மன் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “ஊழல் இல்லை என்பதுதான் உண்மை. பாஜக என்னை கைது செய்ய நினைக்கிறது. எனது மிகப்பெரிய சொத்து எனது நேர்மை.
அவர்கள் அதைக் குறைக்க விரும்புகிறார்கள். எனக்கு அனுப்பப்பட்ட சம்மன்கள் சட்டவிரோதமானது என்று எனது வழக்கறிஞர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.
பாஜகவின் நோக்கம் என்னிடம் விசாரணை நடத்துவது அல்ல, மக்களவைத் தேர்தலுக்கு என்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பது. விசாரணை என்ற சாக்கில் என்னை அழைத்து பிறகு கைது செய்ய நினைக்கிறார்கள்.” என குற்றம் சாட்டியுள்ளார்.