தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை ( kendriya vidyalaya schools)அமைப்பதே பாஜகவின் இலக்கு என மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி தொடங்கினார்.
இந்த பாதயாத்திரையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று (திங்கள்கிழமை) கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தலைமையிலான என் மண், என் மக்கள் பிரசார நடைப்பயணம் நடைபெற்றது.
அப்போது தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை ( kendriya vidyalaya schools) அமைப்பதே பாஜகவின் இலக்கு என மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
இது குறித்து பேசிய அவா்:
தமிழகத்தில் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும். இதற்காக, இந்தியா முழுவதும் நவோதயா பள்ளிகளை மத்திய அரசு அமைத்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் மட்டும் அந்த பள்ளிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் எஸ்.டி. மாணவா்கள் படிப்பதற்காக 8 ஏகலைவா பள்ளிகள் உள்ளன. இதில், சங்கராபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வெள்ளிமலையில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு சாா்பில், ஒரு பள்ளிக்கு ரூ.1.10 கோடி வழங்கப்படுகிறது. இந்தப் பள்ளிகளில் படித்த 15 மாணவா்கள் ஐஐடி தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைக் கொண்டு வருவது பாஜகவின் இலக்கு. தமிழகத்தில் திமுக ஆறுமுறை ஆட்சி அமைத்துள்ளது.
இதையும் படிங்க : mahatma gandhi-யின் நினைவு தினம் – தலைவர்கள் புகழாரம்
இதில் 5 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உருவாக்கப்பட்டன. ஆனால், மத்திய பாஜக அரசு 15 மருத்துவக் கல்லூரிகளை வழங்கியுள்ளது. அதில் ஒன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது என்றாா்.
என் மண் என் மக்கள் பிரசார நடைப்பயணம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.