அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட (protest) பா.ஜ.க.கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சி 86 ஆவது வார்டு கவுன்சிலர் பூமா ஐனா ஸ்ரீ முருகன்.
இவர், தனது வார்டில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாமல் இருப்பதாக புகார் கூறினார்.
அதில், பாதாள சாக்கடைவசதி, வார்டில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாகவும், குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாகவும், மேலும், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட மணல்கள் அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே கிடந்து வருவதாகவும் குறைகூறினார்.
இதனால், வாகனங்களில் செல்பவர்கள் தவறி விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் குறை கூறினார்.
மேலும், இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரியிடம் பல்வேறு புகார்களை கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி குற்றம் சாட்டியுள்ளார்.
இதனையடுத்து, இதைக் கண்டித்து, மாநகராட்சி கவுன்சிலர் பூமாஜனா ஸ்ரீ முருகன் மாநகராட்சி மண்டலம் நான்காவது அலுவலகம் முன்பாக அமர்ந்து போராட்டம் (protest) நடத்தி நடத்தினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.