மக்கள் அதிகமாக வந்து செல்லும் திருச்சி விமான நிலையத்திற்கு பேஸ்புக் மூலம் வெடுக்குண்டு ( trichy airport ) மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான விமான நிலையங்களில் திருச்சி விமானநிலையம் மிகவும் பிஸியான விமான நிலையம் என கூறப்படுகிறது .
நாள் தோறும் பல்வேறு நாடுகளுக்கு இந்த விமான நிலையத்தில் இருந்து ஏரளமான விமானங்கள் சென்று வருகிறது . இப்படி மிகவும் பிஸியான இந்த திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
எத்தனை பயணிகள் வந்தாலும் தீவிர சோதனைக்கு பின்னரே விமான நிலையத்திற்குள் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் கடத்தி வரப்படுகிறதா என்பதை சுங்கத்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் கடுமையாக பாதிப்பு – ஈபிஎஸ் கண்டனம்
இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என பேஸ்புக் மூலம் திடீரென மிரட்டல் விடப்பட்டிருந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக விமான நிலையத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் நடத்தப்பட்ட சோதனையில் மர்ம பொருட்கள் எதுவும் கிடைக்காததால், இந்த மிரட்டல் பொய் என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் விமநிலையத்தில் உள்ள பயணிகள் பெருமூச்சு விட்டனர் .
கடந்த சில நாட்களாகவே விமான நிலையங்களுக்கும் பள்ளிகளுக்கும் தொடர் வெடிகுண்டு மிரட்டல் ( trichy airport ) வருவது தமிழக மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.