இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான குஜராத் தொழிலதிபர் கவுதம் அதானி உலகின் 3வது மிகப்பெரிய பணக்காரராக இருந்தவர்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமையன்று அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
இதன் எதிரொலியாக அதானி குழும பங்குகள் 3வது நாளாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமத்தின் மீது சந்தேகங்கள் எழுந்துள்ளதால் முதலீட்டாளர்கள் அதன் பங்குகளை விற்பனை செய்கின்றனர். இதனால், பங்குச்சந்தைகளில் அதானி குழுமத்தில் மொத்தமுள்ள 7 நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளன.
அதன்படி அதானி டோட்டல் கேஸ் மற்றும் டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களின் பங்குகள் விலை 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே போல் அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் பங்குகள் 18.66 சதவீதமும், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் பங்குகள் 16.11 சதவீதமும், அதானி பவர், அதானி வில்மர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தலா 5 சதவீதமும் வீழ்ச்சி அடைந்துள்ளன.
அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தேசிய அரசியல் அரங்கிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன