பிளிரும் இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை மலர் வைத்து சிவப்பு மஞ்சள் வண்ணத்தில் தனது தவெக கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டிருந்தார்.
கட்சிக்கொடியை விஜய் வெளியிட்டதுமே அக்கொடியில் இருந்த யானைகள் பகுஜன் சமாஜ் தேசியக்கட்சியை நினைவுபடுத்தின. அதற்கேற்றார் போல் அந்த தேசிய கட்சியும் விஜய் கட்சிக்கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Also Read : பேரழிவை ஏற்படுத்திய வயநாடு நிலச்சரிவு – பதறவைக்கும் தகவலை வெளியிட்ட கேரள முதல்வர்..!!
பிஎஸ்பி எனும் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என்றும், உடனடியாக விஜய், தவேக கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுக்கப்படும். மற்றும் வழக்கும் தொடுக்கப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆனந்தன் அறிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுப்பது குறித்து தேசிய தலைமையிடம் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.