டென்னிஸ் விளையாட்டின் முக்கிய போட்டியான விம்பிள்டன் இறுதி போட்டி நேற்று லண்டன் மாநகரில் நடைபெற்றது. இதில் முன்னணி இளம் வீரரான கார்லஸ்( Carlos Alcaraz) , டென்னிஸ் போட்டியின் ஜாம்பவான் வீரரான, கடைசி 4 முறை விம்பிள்டன் சாம்பியனான ஜோக்கோவிச்சை எதிர்க்கொண்டார். தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் முதல் செட் தொடக்கம் முதல் ஜோக்கோவிச், கார்லஸ் இருவருமே சம பலத்துடன் ஆக்ரோஷமாக ஆடினர். முதல் செட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ஜோக்கோவிச் முதல் செட்டை 6-1 என கைப்பற்றி அசத்தினார்.
இதனை தொடர்ந்து இரண்டாம் செட்டில் தனது அசுர வேக ஆட்டத்தை வெளிக்காட்டினார் கார்லஸ். இவரின் அதிரடிக்கு ஜோக்கோவிச் எதிர்வினையாற்ற ஆட்டம் பரபரப்பானது. இறுதியில் 7-6 என கார்லஸ் செட்டை கைப்பற்ற, ஆட்டம் விறுவிறுப்பானது. இதனை தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-3 என கார்லஸ் வெல்ல ஜோக்கோவிச் சற்று சறுக்கினார். இதனை சுதாரித்துக்கொண்டு அடுத்த செட்டில் மிக நுட்பமாக விளையாடி 3-6 என அடுத்த செட்டை வென்று கார்லஸ் வேகத்துக்கு கடும் இடையூராக மாறினார்.
இப்படி ஒருவரையொருவர் மாறி மாறி செட்டை வென்றதால், ஆட்டம் மிக சுவாரஸ்யமாக சென்றது. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி செட் துவங்க. இதில் யார் வெல்வார்கள் என இரு தரப்பு ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். முதல் நான்கு புள்ளிகளில் இருவருமே சமமாக பெற்ற நிலையில் அடுத்த இரண்டு புள்ளிகளில் கார்லஸ் அதிவேக ஆட்டம் ஜோக்கோவிச்சை அசர வைத்தது.
அவரது கையின் அதி வேக சுழற்ச்சியால் பந்து எதிர்பார்த்த வேகத்தை விட அதிக வேகத்துடன் ஜோக்கோவிச்சை சென்று சேர்ந்தது. இதனை சற்றும் எதிர்பாராத ஜோக்கோவிச் கடைசி இரண்டு செட்களை இழந்தார். இறுதியில் அதிரடியில் மிரட்ட, கடைசி இரண்டு செட்களை வென்ற கார்லஸ் 2023 ஆம் ஆண்டின் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.
தொடர்ந்து 4 விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோக்கோவிச்சை தோற்கடித்து மிக இளம் வயதில் விம்பிள்டன் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றார் கார்லஸ். 20 வயதேயான கார்லஸ் அவரது டென்னிஸ் வாழ்க்கையில் பெரும் இரண்டாவது கிராண்ட் சிலாம் பட்டம் இதுவாகும். மேலும் அவர் பெரும் முதல் விம்பிள்டன் பட்டம் இதுவாகும்.