இந்த ஆண்டிற்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் 20 வயதேயான கார்லஸ் அல்கராஸ்( Carlos Alcaraz ) தனது வாழ்வில் முதல் முறையாக விம்பிள்டன் பட்டம் வென்றார். இதுவரை 7 விம்பிள்டன் பட்டம் வென்றுள்ள உலகின் தலை சிறந்த வீரரான செர்பியாவின் ஜோக்கோவிசை தனது அசுர வேக ஆட்டத்தால் அசர வைத்தார்.
போட்டி முடிந்து பரிசு வழங்கு நிகழ்வில் பேசிய ஜோக்கோவிச், இவரது ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது, சமீப காலமாக கார்லஸ் நன்றாக விளையாடி வருவதை பார்க்க முடிகிறது. மேலும் கலிமண் தரையில் சிறப்பாக விளையாடும் திறன் கொண்டுள்ள கார்லஸ், புல் தரைப்போட்டிகளில் அவ்வளவு கடினமாக இருக்க மாட்டார். எனினும் இந்த போட்டியில் புல் தரைக்கு ஏற்ப போட்டியில் மாற்றத்தை கொடுத்தது மிகவும் பிரமிப்பாக இருந்தது.
இவரது அபார ஆட்டம் இன்று என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. என்னை விட இன்று இவர் சிறப்பாக ஆடினார் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அவரவது அசாத்திய திறமைக்கு பரிசாக இந்த பட்டம் கிடைத்துள்ளது. என்று பாராட்டு மடல் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய கார்லஸ், எனது கணவுய் நிறைவேறியது, பல ஆண்டுளாக கடுமையாக போராடிய பின்னர் கிட்டிய அருமையான பட்டம். மேலும் டென்னிஸ் போட்டியில் ஜாம்பவானாக இருக்கும் ஜோக்கோவிச் போன்ற வீரரை வென்றது என் வாழ்வில் மிக முக்கிய தருணம் என்றார்.
மேலும், ஜோக்கோவிச்சை பார்த்து தான் நான் வளர்ந்தேன், நான் பிறந்த குழந்தையாக இருந்தபொழுது ஜோக்கோவிச் உலகின் முக்கிய டென்னிஸ் தொடர்களை வென்றுக்கொண்டிருந்தார். அவரை போன்ற பெரும் வீரர்கள் பல கோடி மக்களின் எடுத்துக்காட்டாக இருக்கின்றனர். இந்த விம்பிள்டன் தொடரின் அவர் 36 வயது தான் புதிய 26 வயதேன குறிப்பிட்டார். அதனை உறுதி செய்யும் விதமாகவே அவரது ஆட்டமும், உத்வேகமும் போட்டியில் வெளிபட்டதை என்னால் காண முடிந்தது.
இந்த போட்டியில் எனக்கு கடுமையான நெருக்கடியை கொடுக்கும் பொழுது அவரது வேகம் எனக்கு புரிந்தது, மேலும் 10 ஆண்டுகளாக தோல்வியே தழுவாத மாபெரும் வீரரை வென்றது தான் இந்த தொடரில் நான் செய்த மிக பெரிய காரியமாக உணர்கிறேன் என்றார்.