சென்னையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் தேர்தல் நடத்தை விதிகள் (pm road show) மீறப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போது தங்களது தேர்தல் பரப்புரைகளை தீவிரபடுத்தி உள்ளனர்.
இதில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தங்களது கட்சியில் இருக்கும் திரை பிரபலங்கள் ,பிரபல அரசியல் தலைவர்கள் என அனைவரும் மக்களிடம் நேரடியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
இதில் சென்னையில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற ரோடு ஷோவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு எழுச்சி உரையாற்றினார் .
இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் கலந்துகொண்ட ரோடு ஷோவில் விதிகளை மீறி பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டதாக (pm road show) தேர்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரில் மாம்பலம், பாண்டி பஜார் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.