மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது, மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியைத் ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயத்தில் மத்திய, மாநில அரசுகள் குறிப்பிட்ட ஊழியர்களுக்குத் போனஸ் வழங்குவது வழக்கம். இதுபோல வழங்கப்படும் போனஸ் கடைநிலை ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட பெரும் உதவியாக இருக்கும்.
அந்த வகையில் இந்த வருடம் நவ. 12ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு ஒரு மாதத்திற்குக் குறைவான நாட்களே இருக்கும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி C பிரிவு & கெசட் ரேங்க் இல்லாத B பிரிவு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல துணை ராணுவப் படைகளில் பணிபுரிவோருக்கும் தீபாவளி போனஸ் அளிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7000 வரை போனஸ் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எந்தெந்த ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும் என்பது குறித்து மத்திய நிதி அமைச்சகம் விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
30 நாள் போனஸ் 30 நாள் சம்பளத்திற்கு சமமாக இருக்கும். உதாரணமாக, ஒரு ஊழியர் மாதம் ரூபாய் 7 ஆயிரம் பெறுகிறார் என்றால், சராசரி போனஸ் ரூபாய் 6 ஆயிரத்து 908 ஆக இருக்கும். தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கும் எந்த இடைவெளியும் இல்லாமல் போனஸ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
https://x.com/PTI_News/status/1714319944228221415?s=20
தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பிற்காக அரசு ஊழியர்கள் காத்திருந்த நிலையில், இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது