சென்னையி IT பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சக்திவேல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வந்தாரை வாழ வைக்கும் சிங்கார சென்னையில் இயங்கி வரும் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சக்திவேல் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
தொடர் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட நிலையில் பணியில் இருந்து விலகிய அந்த பெண், அடையார் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சக்திவேல் குறித்து புகார் அளித்துள்ளார்.
Also Read : கோயில் சொத்துக்களை அறநிலையத்துறையே ஆக்கிரமிப்பதா..? – TTV தினகரன் காட்டம்..!!
புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சக்திவேல், ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் சக்திவேலின் மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.
காவல் துறை தரப்பில், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், சக்திவேல் மீது மேலும் பல பெண்கள் பாலியல் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.