சென்னையில் இன்று அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுப்பெற்ற நிலையில் . மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் சென்னைக்கு அருகில் அக்.17ம் தேதி அதிகாலை கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால், சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால், சென்னையில் இன்று அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு எனவும் சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் மிதமான மழையையே எதிர்பார்க்கலாம். எனவே, மேம்பாலங்களில் பார்க் செய்யப்பட்ட வாகனங்களை வீட்டுக்கு எடுத்துச்செல்லலாம் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.