படித்த சட்டம், சாட்சிகளை வாதங்களை பார்க்காமல் சாட்சியங்களை கேட்காமல் கடவுள் என்ன சொல்கிறாரோ? அதுதான் எனக்கு முதன்மை என்ற நிலைபாடு என்பது ஒட்டுமொத்த மக்களையும் மூடர்களாக ஆக்கும் முயற்சி என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது :
புதுச்சேரியில் இட ஒதுக்கீட்டு முறை, முறையாக பின்பற்றப்படவில்லை. இதனை நீதிமன்றங்கள் கூறியிருக்கிறது. எனவே முறையாக எஸ்சி, எஸ்டி சமூகத்திற்கான இட ஒதுக்கீடை பின்பற்றப்பட வேண்டும்.
Also Read : டானா புயல் எதிரொலி – கொல்கத்தா விமான நிலையம் நாளை மூடல்..!!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கடவுளை வழிபட்ட பிறகே தீர்ப்பு கொடுக்க முடிந்தது என்று கூறியிருக்கிறார். கடவுள் நம்பிக்கை என்பது வேறு, நீதி பரிபாலனம் என்பது வேறு. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது முக்கியமான கடமை.
படித்த சட்டம், சாட்சிகளை வாதங்களை பார்க்காமல் சாட்சியங்களை கேட்காமல் கடவுள் என்ன சொல்கிறாரோ? அதுதான் எனக்கு முதன்மை என்ற நிலைபாடு என்பது ஒட்டுமொத்த மக்களையும் மூடர்களாக ஆக்கும் முயற்சி. இது மிகுந்த வேதனையாக உள்ளது வெட்கக்கேடாக உள்ளது.
அனைத்து நம்பிக்கைகளையும் தகர்க்க கூடிய ஒன்று இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நடிகர் விஜய் கட்சி தொடங்கி மாநாடு நடத்த உள்ளார். இந்த மாநாடு வெற்றியடைய மனதார வாழ்த்துக்கள்என் என்று தெரிவித்தார்.