சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் அவரது தலைமையில் ( andhra cm ) இன்று பதவியேற்க உள்ள அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் அன்மையில் நடந்து முடிந்த பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம்,ஜனசேனா, பாஜக கூட்டணி 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவை தொகுதிகளில் 21 தொகுதிகளிலும் பெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்தது .
இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவி ஏற்க உள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சியானது கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் அருகே உள்ள கேசரபல்லி ஐடி பார்க் மைதானத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற உள்ளது .
Also Read : ஜூன் 14 ஆம் தேதி இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி..!!
மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் 7 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ள நிலையில் உரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் அவரது தலைமையில் இன்று பதவியேற்க உள்ள அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.
ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் உள்ளிட்ட 24 பேர் ( andhra cm ) அமைச்சர்களாக பதிவி ஏற்க உள்ளனர்.
சந்திரபாபு நாயுடு தலைமையில் இன்று பதவியேற்க உள்ள அமைச்சரவை பட்டியல் :