மே மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை (gold price) ரூ.46 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை (gold price) கிராமுக்கு ரூ.37 குறைந்து 5,705 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.45,640ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து 5,715 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,720 ஆக விற்பனையாகிறது.
நேற்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 குறைந்து 4,673 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ. 37,384ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 அதிகரித்து 4,681 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ. 37,448 ஆக விற்பனையாகிறது.
இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500 எனவும் விற்பனையாகிறது.