தங்கம் விலை (gold price) இந்த மாத தொடக்கத்தில் குறைந்து இருந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து தங்கம் விலை உச்சத்தை தொட்டது.
கடந்த ஒரே வாரத்தில் மட்டும் தங்கம் விலை (gold price) 3,000 ரூபாய் வரை உயர்ந்தது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்ததால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில், ஒரே நாளில் இன்று திடீரென தங்கம் விலை சரிந்துள்ளது.
அதாவது, 24 காரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ. 6,067 என விற்பனையாகிறது. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ. 48,536க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து 5,570 ரூபாய் என விற்பனையாகிறது. சவரன் ஒன்றுக்கு ரூ.80 வரை உயர்ந்து ரூ.44,560 ஆக விற்பனையாகிறது.
ஆனால், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து உள்ளது. இந்த நிலையில், ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.70 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.