ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை (today gold price) தொடர்ந்து சரிவை நோக்கி செல்கிறது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், இன்று அதிரடியாக சரிந்துள்ளது.
நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து 5,560 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,480 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் (today gold price) கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து 5, 535 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.200 குறைந்து ரூ.44, 280 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும், நேற்று 18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து 4,554 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.200 வரை குறைந்து ரூ.36,432 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.20 குறைந்து 4,534 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.160 வரை குறைந்து ரூ.36, 272 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும், கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.77.10 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.77,100 எனவும் விற்பனையாகிறது.