சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை (gold price) கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்று தங்கம் விலை (gold price) கிராம் ஒன்றுக்கு ரூ. 25 உயர்ந்த ஒரு கிராம் தங்கம் ரூ.5,590-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று அதிரடியாக தங்கம் விலை சரிந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து 5,560 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,480 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து 4,554 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.200 வரை குறைந்து ரூ.36,432 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, நேற்று வெள்ளியின் விலை ரூ.1.30 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்கப்பட்டது. மேலும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனையாகிறது.