ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை (gold price) தொடர்ந்து சரிவைக் கண்ட நிலையில் தற்போது ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நேற்று முன் தினம், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து 5,630 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,040 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இந்நிலையில், இன்று (மே 1) தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் நேற்று முன் தினம், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை (gold price) கிராமுக்கு ரூ.8 அதிகரித்து 4,612 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.36,896 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று (மே 1) 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.80.40 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,400 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.