ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை (gold price) தொடர்ந்து சரிவைக் கண்ட நிலையில் தற்போது ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நேற்று முன் தினம், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை (gold price) கிராமுக்கு ரூ.10 அதிகரித்து 5,630 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,040 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து 5,615 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ.44,920 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து 4,600 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 96 குறைந்து ரூ.36,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மட்டும் ஒரு கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.