சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதே சந்தை விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
சென்னையை பொறுத்த வரையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தில் விலை ஒரு நாள் அதிகரிப்பதும் மறு குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக தங்கத்தில் விலை தொடர்ந்து அதிரித்து காணப்படுகிறது.
அந்த வகையில் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 5,550 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்த வரையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து, ரூ.78.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.