சென்னையில் தோழி வீட்டிற்கு ஆட்டோவில் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை வயதான காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தோழியை பார்க்க சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த இளம் பெண் ஒருவர் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார் அப்போது நள்ளிரவு நேரம் என்பதால் பத்திரமாக கூட்டிச்சென்று விடுகிறேன் என தந்தை வயதான ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்ச்செல்வன் அந்த இளம் பெண்ணை ஆட்டோவில் ஏற்றியுள்ளார்.
இதையடுத்து சிறுது நேரத்தில் முத்தமிழ்ச்செல்வன் தனது இரு நண்பர்களை அழைத்து ஆட்டோவில் ஏற்றியுள்ளார் தமிழ் தெரியாத அந்த இளம் தனக்கு ஏதோ நடக்கப்போகிறது என்ற நினைத்த நொடியிலே அந்த 3 பேரும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் பின்னர் மாட்டிகொள்வோமோ என்று பயந்த அந்த மூவரும் அந்த பெண்ணை வேறு ஆட்டோவில் ஏற்றிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.
Also Read : மனசாட்சி இருந்தால் மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஈபிஎஸ் ஆவேசம்..!!
இதையடுத்து வேறு ஆட்டோவில் சென்ற அந்த பெண் கண்ணீர்விட்டு கதற தன்னை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார் பின்னர் நடந்ததை கண்ணீருடன் போலீசாருடன் அந்த பெண் தெரிவித்த நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்ச்செல்வன், தயாளன் ஆகியோரை தேடி பிடித்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தயாளன் சரித்திர பதிவேடு குற்றவாளி என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 3ம் தேதி இச்சம்பவம் நடைபெற்ற நிலையில், குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சென்னையில், ஆட்டோவில் இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பையம் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது .