சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யத் ( Chennai Corporation ) திட்டமிட்டுவருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
பிராட்வேயில் ‘மல்டி மோடல் இன்டகிரேஷன் என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிக்காக இடமாற்றம் செய்யப்படவுள்ளது
தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் ₹5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன
அடுத்த சில மாதங்களில் பிராட்வே பேருந்து நிலையம் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது
இதன்பிறகு பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி தொடங்கும்
Also Read : வெப்பம் தணிந்தபின் இடைத்தேர்தலை நடத்துங்கள் – ராமதாஸ் வேண்டுகோள்
பிராட்வே பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கொண்ட பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது
குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்படவுள்ளது
இங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என்று அனைத்தையும் ( Chennai Corporation ) இணைக்கும் வகையில் 7 நடை மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது