முதலாவது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ( issf ) போட்டி எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் நடைபெற்றுவருகிறது . இந்த போட்டியில் உலக நாடுகளான சீனா, அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 17 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
நேற்று நடைபெற்ற ஆண்கள் ஜூனியர் பிரிவின் 10 மீட்டர் இறுதி போட்டியில் ரவிசங்கர் ஸ்ரீ கார்த்திக் சபரிராஜ், திவ்யனாஷ் சிங் பன்வார், விதித் ஜெயின் ஆகியோர் அடங்கிய இந்திய அணி பலம் ஆவாய்ந்த சீனா அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சீனா அணியை 17-11 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி தோற்கடித்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா துல்லியமாக தொடர்ந்து இலக்கை தாக்கியது. சீனாவை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி தங்க பதக்கத்தை தட்டி சென்றது.
இந்த ஆடவர் அணியில் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநாணக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு பயின்றுவரும் மாணவனான ரவிசங்கர் ஸ்ரீ கார்த்திக் சபரிராஜ் இடம்பெற்றிருந்தார். 11 தங்கம் 6 வெள்ளி 11 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கத்துடன் இந்திய அணி 2 ஆம் இடத்திலுள்ளது .