சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, சுமார் 93,000 நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஓட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் செலுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையின் பல முக்கிய பகுதிகளில் தெரு மாடுகள் மற்றும் தெரு நாய்களால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்லபவர்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் . அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக தெரு நாய்களுக்கு வெறி பிடித்துள்ளதால் கண்ணில் சிக்கிக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாரபட்சமின்றி கடித்து குதறி வருகிறது.
இதனால் கடும் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள் இந்த பிரச்சனைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு வலியுறுத்திய நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி இதுகுறித்து முதற் கட்டமாக மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளது.
அந்த மாஸ்டர் பிளான் என்னவென்றால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, சுமார் 93,000 நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஓட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் செலுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுமட்டுமின்றி தடுப்பூசி செலுத்திய நாய்களை அடையாளம் காணும் வகையில், அவைகளின் உடலின் ஒரு பகுதியில் வண்ணம் தீட்டவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.எது எப்படியோ எங்களுக்கு நாய்கள் தொல்லை இல்லாமல் இருந்தாலே போதும் என பொதுமக்கள் கருத்து கூறி வருகின்றனர்.