கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு சென்னை – நெல்லை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே (Railway) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தியில் கூறிருப்பதாவது :
கோடைக்கால விடுமுறையை ஒட்டி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 6.45க்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 8.30க்கு திருநெல்வேலி சென்றடையும்.
Also Read : https://itamiltv.com/ed-raids-at-director-ameers-office-and-house/
மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 7 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30இல் (வியாழன்) சிறப்பு ரயில்.
சென்னையில் இருந்து நெல்லைக்கு ஏப்ரல் 12, 19, 26, மே 3, 10, 17, 24, 31 இல் (வெள்ளி) சிறப்பு ரயில் இயக்கம்
எழும்பூரில் இருந்து விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக இந்த ரயில் நெல்லை சென்றடையும் என தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள ( Railway ) அதிகாரப்பூர்வ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி இதுகுறித்த ஆடவனையையும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.