சென்னையில் நேற்று விடாமல் பெய்த மழையால் மிக கனமழை பதிவுவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .
சென்னையில் அதிகபட்சமாக மெரினா கடற்கரையொட்டிய பகுதியில் 12 செ.மீ., மழையும், அம்பத்தூரில் 9.5 செ.மீ., மழையும், மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் 9.4 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் உள்ள 22 போக்குவரத்து சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என்றும் மழையினால் சரிந்த 12 மரங்களும் உடனே அகற்றப்பட்டுள்ளதாகவும் . லேசாக மழைநீர் தேங்கிய 41 இடங்களில், 31 இடங்களில் மழைநீர் முழுமையாக வடிந்தது என்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 301 கன அடி நீர்வரத்து உள்ளது. ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் கூடுதலாக உபரி நீர் வெளியேற்ற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை குடிநீர் ஏரிகளில் சராசரி நீர் இருப்பு – 74.9%
5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில், தற்போது 8.806 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.
செம்பரம்பாக்கம் – 85.87% , புழல் – 83.18% , பூண்டி – 57.63% , சோழவரம் – 58.83% , கண்ணன்கோட்டை – 86.6%