தமிழகத்தில் சென்னை – தூத்துக்குடி இடையே பாரத் மாலா திட்டத்தில் இரண்டாம் கட்டத்தின் ( Expressway ) கீழ் மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் வே அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையிலிருந்து திருச்சிக்கு 4 மணி நேரத்தில் செல்லும் விதமாக எக்ஸ்பிரஸ் வே அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்போது சென்னை டூ தூத்துக்குடிக்கு வெறும் 6 மணி நேரத்தில் செல்லும் விதமாக மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் வே திட்டத்தை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்தியாவின் மிக முக்கிய எக்ஸ்பிரஸ்வேக்கள் பெரும்பாலும் வட இந்தியாவில் மட்டுமே இருக்கிறது. அங்கு இருப்பது போல நீண்ட எக்ஸ்பிரஸ் வே சாலைகள் இன்னும் தமிழகத்தில் அமைக்கப்படவில்லை.
இந்நிலையில் பாரத் மாலா பரியோஜன இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் திருச்சியை இணைக்கும் இரண்டாவது எக்ஸ்பிரஸ் வே வழித்தடத்தை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.
இது மட்டுமில்லாமல் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு முழுவதும் சுமார் 6,747 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் எக்ஸ்பிரஸ் சாலைகள் இடைவழிச் சாலைகள் மற்றும் பொருளாதார வழித்தடங்களை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக அதிகாரிகளை பணிக்கு அமர்த்தி உள்ளது. இதில் தமிழகத்திற்கான திட்டங்களும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read : மீண்டும் மீண்டுமா : கார் ஓட்டியதில் விதிமீறல் – டி.டி.எப். வாசன் மதுரையில் கைது..!!
தற்போது சென்னை டூ பெங்களூர் இடையே நடைபெற்று வரும் எக்ஸ்பிரஸ் வே பணிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அடுத்ததாக சென்னை, திருச்சிக்கு 4 மணி நேரத்தில் செல்லும் விதமாக எக்ஸ்பிரஸ் வே அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சென்னை, தூத்துக்குடி இடையே பிரம்மாண்ட எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சாலை பாரத் மாலா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளதாகவும் எட்டு வழி சாலையாக இந்த சாலை அமைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
சென்னை டூ தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் வே மொத்தம் 606 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை சென்னையில் இருந்து திண்டிவனம் விழுப்புரம் உளுந்தூர்பேட்டை விருத்தாச்சலம் அரியலூர் செங்கிப்பட்டி புதுக்கோட்டை பிள்ளையார்பட்டி இடையே தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
தற்போது சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல ( Expressway ) கிட்டத்தட்ட 9 மணி நேரம் 59 நிமிடங்கள் ஆகிறது. இந்த எக்ஸ்பிரஸ் வே மட்டும் வந்தால் சென்னையில் இருந்து தூத்துக்குடி வெறும் ஆறு மணி நேரத்தில் சென்றடைய முடியும் என கூறப்படுகிறது.