பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத்தொகை வழங்கி கவுரவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற நகரமான பாரிஸில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17ஆவது பாராலிம்பிக் போட்டி தொடரில் 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை காட்டினர்.
இந்நிலையில் அனல் பறக்க நடைபெற்ற இந்த தொடர் கடந்த சில நாட்களுக்கு முன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் தாயகம் திரும்பி உள்ளனர்.
உலக புகழ் பெற்ற இத்தொடரில் தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பங்கேற்று பதக்க வீட்டை நடத்தி வந்துள்ளனர்.
Also Read : திமுக – விசிக கூட்டணி உறவில் எந்த விரிசலும், உரசலும் இல்லை – திருமாவளவன் பேட்டி
பதக்கங்களை வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அவர்களது சொந்த ஊர்களில் உற்சாக வரவேற்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத்தொகை வழங்கி கவுரவித்தார்.
பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை துளசிமதிக்கு ₹2 கோடியும், வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, நித்யஸ்ரீ, மனிஷா ஆகியோருக்கு தலா ₹1 கோடியும் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்துள்ளார்.