அரசால் கட்டமைக்கப்பட்ட பல பணிகளை இன்று திறந்து வைப்பதற்காகவும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என மாவட்ட வாரியாக கள ஆய்வு மேள்கொள்ளவும் முதல்கட்டமாக இன்று கோவையில் இருந்து தனது பயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்க உள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் பயணத்திட்டத்தின் முழு விவரம் :
காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை செல்கிறார்.
காலை 11.30 மணியளவில் விளாங்குறிச்சியில் ₹114.16 கோடி செலவில் 3.04 ஏக்கர் பரப்பளவில், 8 தளங்ளுடன் கட்டப்பட்டுள்ள புதிய ஐடி வளாகத்தை திறந்து வைக்கிறார்.
Also Read : பெரு நாட்டில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழப்பு..!!
நண்பகல் 12 மணியளவில் சுகுணா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு விடுப்பு ஆணைகளை வழங்க உள்ளார்.
மாலை 4 மணியளவில் சிவாலயா திருமண மண்டபத்தில் தங்க நகை தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். தங்க நகை தொழிலில் உள்ள பிரச்னைகளை அவரிடம் கேட்டறிய உள்ளார்.
அதன்பின் போத்தனூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை வழங்க உள்ளார்.