தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் அரசு பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அமெரிக்க செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கூறிருப்பதாவது :
முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற பயணங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். இன்று முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ, சிகாகோவிற்கு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்க செல்கிறேன்.
3 ஆண்டுகளில் ₹9.99 லட்சம் கோடி மதிப்பில் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 18.89 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
Also Read : தெலங்கானாவில் புஷ்பா பட பாணியில் கஞ்சா கடத்திய நபர் கைது..!!
இந்தியாவிலேயே தொழில் முதலீட்டில் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் உள்ளது. முதலீட்டாளர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு என்னை சந்திக்க, தமிழ்நாட்டுக்கு முதலீடுகளைக் குறித்து ஆலோசிக்க நேரம் ஒதுக்கக் கோரிக்கை வைத்துள்ளனர். நான் அங்கு இருக்கும் நாட்களே போதாது எனக் கருதுகிறேன். முதலீட்டை ஈர்க்க மகிழ்ச்சியுடனும், உறுதியுடனும் செல்கிறேன்
அமைச்சர் துரைமுருகனும், ரஜினிகாந்த்தும் நீண்ட கால நண்பர்கள், அவர்கள் இருவருமே இதைச் சொல்லிவிட்டனர். அதை நீங்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர பகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற பயணங்களை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்; ரூ.3,450 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் முன்னேற்ற நிலையில் உள்ளன என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.