மூன்று நாள் பயணமாக சேலம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீரை திறந்து வைத்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக சேலம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாய மக்களுக்காகவும் காவிரி டெல்டா பாசனத்திற்காகவும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்துள்ளார் . மேலும் ₹75.95 கோடியில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை 50% மானியத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது : குறுவை சாகுபடிக்காக 90 ஆண்டுகளில் 19வது முறையாக (ஜூன் 12ம் தேதி) இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து உழவர் நலன் சார்ந்த திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது
குறிப்பாக கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தி, அதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் இதுவரை 23.54 லட்சம் உழவர்கள் பயனடைந்துள்ளனர்.
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார், திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக அவர் மாற்றினார்.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்த ஜெயலலிதா, பின்னர் கல்வெட்டில் தனது பெயரைப் பொறித்து திறந்து வைத்தார்; இந்த வரலாறு எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வாய்ப்பு இல்லை
பிரதமர் மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என தெரியவில்லை? தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்ற அமித்ஷாவின் பேச்சு குறித்த கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கொடுத்தார்.