அரசு பள்ளிக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வழங்கிய ஆயி (Aayi ammal) என்ற பூரணம் அம்மாளுக்கு குடியரசு தினத்தில் முதலமைச்சர் விருது வழங்கினார்.
இந்தியாவின் 75வது குடியரசு தினம் (republic day) இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது.
காலை 8 மணிக்கு மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ராணுவம், விமானப்படை, கடலோர காவல் படை, கடற்படை, தமிழக காவல் துறை, தேசிய மாணவர் படை, வனம், சிறை, தீயணைப்பு துறைகளின் படைப்பிரிவினர்.
மற்றும் பள்ளி, கல்லூரி பேண்டு வாத்திய குழுவினர், சாரண, சாரணியர், ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதனை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக விளையாட்டு, வேளாண்மை, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் உட்பட தமிழக அரசின் சாதனையை விளக்கும் துறைசார்ந்த 22 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து அரசுப் பள்ளி , அரசு கல்லூரி மாணவிகள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவிகளின் தமிழக பாரம்பரிய கலை கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
https://x.com/ITamilTVNews/status/1750753121058574446?s=20
அதனைத் தொடர்ந்து கோட்டை நல்லிணக்க விருது, கள்ளச்சாராயம் ஒழிப்பதற்கான காவலர்களுக்கு விருது, மதுரை அரசுப் பள்ளிக்கு நிலம் தானமாக வழங்கிய ஆயி பூரணம் அம்மாள் உள்ளிட்டோருக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
அரசு பள்ளிக்கு நிலம் வழங்கிய ஆயி அம்மாள் (Aayi ammal)
மதுரை கிழக்கு ஒன்றியம், யா. கொடிக்குளம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் திருமதி. உ. ஆயி அம்மாள் என்ற பூரணம் .
இவர் அன்னார்யா, கொடிக்குளம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை தனது மகள் ஜனனி என்பவரின் நினைவாக மனமுவந்து தானமாக வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க : republic day awards -முகமது ஜூபேர் முதல் பூர்ணம் அம்மா வரை முழு விவரம்
மாணவர்களின் நலன் கருதி 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தினை தான் படித்த பள்ளியினை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் பொருட்டு கட்டிடங்கள் கட்டுவதற்காக வழங்கியுள்ளார்.
இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி பள்ளிக்காக தனது நிலத்தை தானமாக வழங்கிய மதுரை ஆயி அம்மாளுக்கு முதலமைச்சர் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.