தமிழர்களின் நலன் சார்ந்த உரிமைக்காக நிதி ஆயோக் கூட்டத்திற்கு நேரில் செல்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டு சும்மா இருக்கலாமா? என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே வாசன் கூறியதாவது :
நிதி ஆயோக் கூட்டம் மிக முக்கியமான கூட்டமாகும். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காமல் கடமை தவறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பேசாமல், நிதி ஆயோக் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று தமிழகத்தின் கோரிக்கையை தெரிவித்திருக்க வேண்டும்.
Also Read : தொல்லியல் பணிகளுக்கு சமஸ்கிருதம் கட்டாயமா ..? – டாக்டர் அன்புமணி கண்டனம்..!!
தமிழர்களின் நலன் சார்ந்த உரிமைக்காக நிதி ஆயோக் கூட்டத்திற்கு நேரில் செல்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டு சும்மா இருக்கலாமா? அரசியல் காரணத்துக்காக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.
பிஹார் மாநிலத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு, அடுத்து தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மற்றாந்தாய் மனபான்மை இல்லாமல் தமிழகத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது என ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.