சர்வதேச வில்வித்தை போட்டிக்கு தேர்வாகியுள்ள திருவாரூரை சேர்ந்த கல்லூரி மாணவி அஜிஷா, வில் அம்புகள் வழங்ககோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி அருகே சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி அஜிஷா. இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக வில்வித்தை பயின்று வருகிறார். மாவட்ட, மாநில அளவில் பல்வேறு வில்வித்தை போட்டிகளில் பங்கேற்ற அஜிஷா வெற்றி பெற்றுள்ளார்.
அத்துடன் அடுத்த ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச வில்வித்தை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வில் அம்புகள் வழங்ககோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால், வில் அம்புகள் வாங்க வசதி இல்லை எனவும், இதனால், தீவிர பயிற்சி மேற்கொள்ள சிரமப்படுவதாகவும் அஜிஷா தெரிவித்துள்ளார்.