ஆந்திராவில் சொல்பேச்சு கேட்காத கல்லுரி மாணவிகளுக்கு கல்லுரி நிர்வாகம் கடுமையான தண்டனை வழங்கியதால் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் அல்லூரி சீத்தாராமராஜு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியர் சொல்பேச்சை கேட்காத மாணவிகளை தொடர்ந்து 3 நாட்கள் 200 தோப்புக்கரணம் வரை போடவைத்ததால் 50 மாணவிகள் கால் வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரி நிர்வாகம் செய்த இந்த செயல் குறித்து தகவல் அறிந்து அப்பகுதி எம்.எல்.ஏ. மிரியாலா ஷிரிஷாதேவி நேரில் சென்று மாணவிகளை நலம் விசாரித்தார்.
இதையடுத்து இவ்விவகாரம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு எம்.எல்.ஏ. மிரியாலா ஷிரிஷாதேவி வலியுறுத்தியுள்ளார்.