சென்னை கொடுங்கையூரில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை (sleeping pills) சாப்பிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் எம்.ஜி.ஆர். நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம்-பவானி தம்பதி. இந்நிலையில், பவானியின் கணவர் ஆறுமுகம் இறந்து விட்டார்.
அதன் பின்னர், பவானி தனது மகள் கீர்த்தனா (18) உடன் வசித்து வந்தார். கீர்த்தனா, திருவொற்றியூர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக கீர்த்தனா வீட்டில் சோகமாக இருந்துள்ளார். அதனால், இதுபற்றி அவரது தாய் பவானி கீர்த்தனாவிடம் கேட்டதற்கு அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
இதனையடுத்து, கீர்த்தனா திடீரென 30-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை (sleeping pills) சாப்பிட்டு மயங்கி விழுந்த்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் பவானி, உடனடியாக கீர்த்தனாவை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு கீர்த்தனாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கீர்த்தனா நேற்று பரிதாபமாக உயரிழந்தார். மேலும், இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், கீர்த்தனா அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவனை காதலித்து வந்ததாகவும், இவர்கலுக்குள் காதலில் பிரச்சினை ஏற்பட்டதால் கீர்த்தனா விரக்தியில் இருந்துள்ளார்.
இதனால், கீர்த்தனா அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.