சென்னை கூவம் ஆற்றில் கட்டடக் கழிவுகள் நிரம்பி நிற்கும் நிலையில் இதற்கு முடிவு கட்டும் வகையில் பசுமை தீர்ப்பாயம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
சென்னையின் முக்கிய பகுதிகளில் இருக்கும் கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கொட்டிய கட்டடக் கழிவுகளை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அகற்றிட வேண்டும் என தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
Also Read : இணையத்தை கலங்கடித்த EY ஊழியரின் மரணம் – வெளியான அதிர்ச்சி தகவல்..!!
சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஈரடுக்கு மேம்பால அமைக்கும் பணிக்காக கூவம் ஆற்றில் தூண்கள் அமைத்து வருகிறது.
இந்த பணிக்காக கூவம் ஆற்றின் குறுக்கே பல இடங்களில் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
இது தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகளை குறிப்பிட்ட தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளது.