அரசியல் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேச வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு பதியப்பட்டது . இதுமட்டுமின்றி சீமானின் பேச்சிக்கு கண்டனம் தெரிவித்து பல தரப்பினர் கண்டன குரல் எழுப்பினர் .
Also Read: காமுக கமுக்கன் ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை – அடுத்தகட்ட நகர்வு என்ன..?
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும், வழக்கிலிருந்து விடுவிக்கவும் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் இந்த சுழலில் சீமானின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
அரசியல் தலைவர்கள் குறித்து பொதுவெளியில் எப்போது பேசினாலும் நிதானத்துடன் பேச வேண்டும் என சீமானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தும் நீதிமன்றத்தில் ஆஜரானால் தான் சீமானுக்கு நிதானம் வரும் எனவும் நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் குறித்து காட்டமான கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் சீமானுக்கு தற்போது நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அவரது வேட்பாளர் வெற்றி பெறுவாரா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.