பலவேறு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியை நவம்பர் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த பாஜக உண்ணாவிரத போராட்டத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்த வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே பா.ஜ.க. கொடிக்கம்பம் விவகார வழக்கில் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட்டில் முதலமைச்சர் புகைப்படத்தை மாற்றி பிரதமரின் புகைப்படத்தை வைத்த குற்றத்திற்காக 3 பிரிவுகளின் கீழ் அமர் பிரசாத் ரெட்டி மெது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர் . இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர் பிரசாத் ரெட்டியை நவம்பர் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.