நடிகை கஸ்தூரிக்கு வரும்29-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு தெலுங்கு மக்கள் குறித்து தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசியுள்ளார்.
கஸ்தூரியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் கஸ்தூரியை கைது செய்ய முயன்றபோது வீட்டில் இருந்து தப்பிச்சென்று தலைமறைவாக இருந்தார் . பின்னர் தான் பேசியதற்கு மன்னிப்பு கூறிய கஸ்தூரி முன் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
Also Read : ஆம்ஸ்ட்ராங் மனைவியை சட்டமன்றத்திற்கு அனுப்பவேண்டும் – இயக்குநர் பா.ரஞ்சித்
கஸ்தூரியின் ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி காட்டமான கருத்துக்களை சொல்லி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி எந்நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐதராபாத்தில் உள்ள தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கி இருந்த நடிகை கஸ்தூரியை எழும்பூர் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து கஸ்தூரியை சென்னை அழைத்து வந்த போலீசார் அவரை சென்னை எழும்பூர் நீதிமன்றதில் ஆஜர் படுத்தினர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரிக்கு வரும்29-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி உத்தரவிட்டுள்ளார்.